Latestமலேசியா

4வது தலைமுறையுடன் 100வது பிறந்தநாளை கொண்டாடிய, சித்தியவானைச் சேர்ந்த பட்டம்மாள் பாட்டி

சித்தியவான், செப்டம்பர் 11 – பேராக்கில், சீமைதுறை தோட்டம் என்று பிரபலமாக அறியப்பட்ட சித்தியவான் தோட்டத்தில் பிறந்து வளர்ந்தவர்தான் திருவாட்டி பட்டம்மாள் நாராயணசாமி.

தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட இவர், கடந்த மாதம் ஆகஸ்ட் 24ஆம் திகதி தனது 100அவது பிறந்த நாளை, 18 பேரப் பிள்ளைகள் உட்பட இரண்டு கொள்ளுப் பேரப்பிள்ளைகளுடன் உற்சாகமாகக் கொண்டாடினார்.

நாராயணசாமி தொப்பச்சியம்மள் அவர்களின் மூன்று பிள்ளைகளில் கடைக்குட்டியானவர், தனது ஐந்து பிள்ளைகளுடன், 4ஆவது தலைமுறை பேரன், பேத்தியுடன் கொண்டாடிய மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டார்.

தனது கடைசி மகனுக்கு இரண்டு வயது இருக்கும் போது இவர் தனது கணவரான சுப்பனை விபத்து ஒன்றில் இழைந்து கைம்பெண்ணானர்.

அந்நேரத்தில் துவண்டு விடாமல், தோட்டத்தில் ரப்பர் மரம் சீவியும், பகுதி நேரமாகத் தையல் தொழில் செய்தும், அயராது உழைத்து, chargemen, electrician, moulding executive என தன் பிள்ளைகளை இவர் கரை சேர்த்துள்ளார்.

ஆல மரமாகத் தனித்து நின்று தனது தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக இருக்கும் இவரைக் குறித்து அவரது கடைசி மகன் கலைச்செல்வன் நம்மோடு சில நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

திருவாட்டி பட்டம்மாளுக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்று சேர்ந்து நூறு என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

தனித்து வாழும் தாயால் என்ன செய்ய முடியும் என்று கேட்டால்?, அதற்குத் திருவாட்டி பட்டம்மாள் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு எனலாம்.

துணித்து நின்று, அக்காலத்திலேயே 3 ஏக்கர் நிலம் வாங்கி, சுயமாக வீடு காட்டி நமது அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழும், அவருக்கு வணக்கம் மலேசியாவின் நூற்றாண்டு பிறந்த நாள் வாழ்த்துகள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!