
கோலா சிலாங்கூர், மார்ச் 12 – அண்மையில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியம் மற்றும் சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் மன்றம் தலைமையில் , சிலாங்கூர் மாநில முன்னாள் முப்படை வீரர்கள் சங்கம் மற்றும் Legendary Riders Malaysia Club ஆகியவை இணைந்து நடத்திய சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்குக்கான குறுக்கோட்டப் போட்டியில் மொத்தம் 94 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 800 மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி வளாகத்தில் இடம்பெற்ற இப்போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது.
இந்த போட்டியை சுகாதார அமைச்சரும் கோலாசிலாங்கூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டர். Dzulkefly அஹ்மத் சார்பில் அவரின் உதவியாளர் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய கோலா சிலாங்கூர் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் தீபன், இப்படி பெரும் திரளான தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கூடியிருப்பது ஒரு சாதனை எனக் கூறியதோடு இது தொடரவேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதே சமயத்தில் சட்டமன்ற உறுப்பினர் சார்பில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் மேலாளர் வாரியம் மற்றும் சிலாங்கூர் மாநில தலைமையாசிரியர் மன்றதுக்கு தலா ஐயாயிரம் ரிங்கிட்டையும் வழங்கினார்.
இதனிடையே, லெஜென்டாரி ரைடர்ஸ் மலேசியா கிளப்பின் தலைவர் மகேந்திரமணி பேசுகையில்
நிகழ்ச்சியின் ஏற்பட்டு குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
தமிழ் பள்ளியின் மேன்பாட்டுக்கு லெஜென்டாரி ரைடர்ஸ் என்றும் கைகொடுப்போம் , அதே வேளை இதுபோன்ற மாணவர் நலன் தொடர்பான செய்திகளை மக்களிடையே கொண்டுச் சேர்ப்பதில் என்றுமே உறுதுணையாக செயல்பட்டு வரும்
வணக்கம் மலேசியா இலக்கவியல் ஊடகம் தங்களின் ஊடக பங்காளியாக செயல்பட்டு வருவதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.