
கோலாலம்பூர், பிப் 19 – கடந்த ஆண்டு டிசம்பர் 31 நிலவரப்படி, 55 வயதுக்குட்பட்ட 13.2 மில்லியன் இ.பி.எப் உறுப்பினர்களில் 4.11 மில்லியன் பேர், மொத்தம் RM12.07 பில்லியன்களை உள்ளடக்கிய ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான நெகிழ்வான கணக்கிலிருந்து மீட்டுள்ளனர்.
நெகிழ்வான கணக்கின் மொத்த சேமிப்பின் அளவு 7.73 பில்லியன் ரிங்கித் ஆகும்.
ஒவ்வொரு இ.பி.எப் உறுப்பினரும் தங்கள் நிதியை நம்பிக்கையுடனும், விவேகமாகவும் ம் நிர்வகிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமிர் ஹம்சா அஸிஸான் (Amir Hamzah Azizan) கூறினார்.
நெகிழ்வான கணக்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் , அவசரமாக இருக்கும் போது உறுப்பினர்களின் பணப்புழக்கத்தை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறினார்.
எனினும் இலக்கு அடிப்படையில் இ.பி.எப் தொகையை திரும்ப மீட்பதற்கான ஆலோசனையை இந்த நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டியதில்லை.
பொதுவாக, நெகிழ்வான கணக்குகளை வழங்குவது EPF உறுப்பினர்களின் குறுகிய கால நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவியுள்ளது என இன்று நாடாளுமன்றத்தில் பேரரசரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முடித்து வைத்து உரையாற்றியபோது அமிர் ஹம்சா (Amir Hamzah) இத்தகவலை வெளியிட்டார்.