Latestமலேசியா

45,000கும் மேற்பட்ட மின் வாகனங்கள் உள்நாட்டில் பதிவு – போக்குவரத்து அமைச்சு

கோலாலம்பூர், நவ 7 – இதுவரை 45,000 த்திற்கும் மேற்பட்ட மின் வாகனங்கள்
உள்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஆகஸ்டு மாதம்வரை சாலை போக்குவரத்து துறையான ஜே.பி.ஜே. வில் 45,737 மின் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது வரவேற்கக்கூடியதாக இருக்கிறது. Prasarana Malaysia Berhad தனது மின் பேருந்துகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் வகையில் கூடுதலாக 1,450 பேருந்துகளை பெறவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்வாண்டு இதுவரை தனது முதல் கட்ட திட்டத்தில் Prasarana 250 புதிய மின் பேருந்துகளை பெற்றுள்ளது. நகர்புறங்களுக்கான அனைத்து ரயில் போக்குவரத்திற்கு மின் ரயில் பயன்படுத்தப்படுவதிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என போக்குவரத்து அமைச்சு நாடாளுமன்றத்தில் வழங்கிய பதிலில் தெரிவித்துள்ளேது. ரயில்வே அசெட் கார்ப்பரேஷன் ( RAC ) மற்றும் KTMB எனப்படும் keratapi Tanah Melayu Bhd மூலம் மூலம் பத்து காஜா, சிரம்பான் , கெம்பாஸ் உட்பட 15 இடங்களில் Solar photovoltaic சூரிய ஒளிமின்னழுத்தத்தை பொருத்தும் முயற்சிகளும் விரிவுபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!