Latestமலேசியா

46 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து 2 லாரிகளுடன் மோதியதில் இருவர் பலி, 16 பேர் காயம்

பத்து பஹாட், ஜூலை-3 – ஜோகூர், பத்து பஹாட்டில், இன்று அதிகாலை சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் மரணமடைந்தனர்; 16 பேர் காயமுற்றனர்.

PLUS நெடுஞ்சாலையின் 80.7-ஆவது கிலோ மீட்டரில் அப்பேருந்து, வாகனங்களை இழுத்துச் செல்லும் Volvo இரக லாரி, எண்ணெய் டாங்கி லாரி ஆகியவற்றுடன் மோதியது.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, இடிபாடுகளில் நசுங்கி மாண்ட 43 மற்றும் 44 வயதிலான 2 ஆடவர்களின் சடலங்களை மீட்டது. பேருந்தில் 2 பெண்கள் உட்பட 46 பயணிகள் இருந்தனர்.

அதில் காயமடைந்தவர்கள் முறையே 14 ஆண் பயணிகள், ஒரு பெண் மற்றும் பேருந்து ஓட்டுநர் ஆவர். எஞ்சிய 27 பயணிகள் காயமின்றி தப்பினர்.

இழுவை லாரி மற்றும் எண்ணெய் லாரிகளின் ஓட்டுநர்களுக்கும் காயமில்லை. விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!