
கோலாலம்பூர், பிப் 3 – Yayasan Akalbudi நிதி சம்பந்தப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல், ஊழல் மற்றும் பணமோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளிலிருந்தும் தன்னை விடுவித்து விடுதலை செய்யும்படி துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி (Ahmad Zahid Hamidi ) மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜனவரி 28 ஆம் தேதியன்று அவர் உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார். அரசாங்கத் தரபுப் வழக்கறிஞரை பிரதிவாதியாகக் குறிப்பிட்டு, தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று சட்டத்துறைத் தலைவர் ஜனவரி 8 ஆம் தேதியன்று வெளியிட்ட ஊடக அறிக்கையை மேற்கோள் காட்டி ஸாஹிட் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது கட்சிக்காரர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்படாமல் விடுதலையை வழங்க உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து இந்த விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் நடந்த நடவடிக்கைகளுக்குப் பிறகு ஸாஹிட்டின் வழக்கறிஞர் டத்தோ ஹிஸ்யாம் தே போ தேய்க் ( Hisyam Teh Poh Teik ) செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.



