Latestஉலகம்

48 மணி நேரத்தில் 12,000 ஈரானியர்கள் கொல்லப்பட்டதாக ரேசா பஹ்லவி குற்றச்சாட்டு; Ayatollah-வின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு அழைப்பு

வாஷிங்டன், ஜனவரி-17 – நாடு கடந்து வாழ்ந்து வரும் ஈரானிய எதிர்கட்சித் தலைவரும் பட்டத்து இளவரசருமான ரேசா பஹ்லாவி (Reza Pahlavi),
ஈரானில் நிகழ்ந்த அரச அடக்குமுறையில் 48 மணி நேரத்தில் சுமார் 12,000 பேர் கொல்லப்பட்டதாக கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இந்த அப்பாவி மக்களின் படுகொலைக்கு ஈரானிய உச்சத் தலைவர் Ayatollah Ali Khamenei தலைமையிலான அரசே முழுப் பொறுப்பு என ரேசா தெரிவித்துள்ளார்.

நிலைமை கைமீறி விட்டதால், ஈரானிய மக்களுக்கு ஆதரவாக அனைத்துலகச் சமூகம் உடனடியாக தலையிட வேண்டும் என, வாஷிங்டனில் அவர் பேசினார்.

குறிப்பாக Ayatollah அரசுக்கு எதிராக தூதரக அழுத்தம், இலக்கிடப்பட்ட தடைகள் போன்றவற்றை அமுல்படுத்துவதோடு, போராட்டக்காரர்களுக்கு தடையில்லா இணைய வசதி வழங்கவும் உலக நாடுகள் அவர் வலியுறுத்தினார்.

ஆனால் ரேசா பஹ்லவி கூறுவது போல் 48 மணி நேரங்களில் 12,000 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற தகவல் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.

மனித உரிமை அமைப்புகளே குறைந்த எண்ணிக்கையையே காட்டுகின்றன.

இருப்பினும் பல ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் என எச்சரிக்கின்றன.

ஒரு பக்கம் அமெரிக்கா, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சியால் கொதித்தெழுந்துள்ள உள்நாட்டு மக்கள், மற்றொரு பக்கம் ஆட்சியைக் கைப்பற்றத் துடிக்கும் ரேசா பஹ்லவி என நாளுக்கு நாள் Ayatollah-வுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் ஈரான் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!