
கோலாலாம்பூர், ஏப்ரல்-3-மார்ச் மாதத்திற்கான Magnum 4D Jackpot குலுக்கலில் 3 அதிர்ஷ்டசாலிகள் RM20 மில்லியனுக்கும் அதிகமான பரிசுத் தொகையைத் தட்டிச் சென்றுள்ளனர்.
இந்த வெற்றிகள் சாதாரண எண்களால் அல்ல.மாறாக, அவர்களின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணங்களால் ஈர்க்கப்பட்ட எண்களால் கிடைத்தவையாகும்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் ஜோகூர் பாரு, Century Garden-னைச் சேர்ந்த ஒருவர், தனது முதல் காரை பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் கார் பதிவு எண்களை தொடர்ந்து பயன்படுத்தி, RM13 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வென்றார்.
ஜோகூர், மாசாயில் 50 ஆண்டுகள் அனுபவம் கொண்ட மற்றொருவர், ஒரே மாதிரியான எண்களை தொடர்ந்து பயன்படுத்தி RM3.5 மில்லியன் பரிசைப் பெற்றார்.
இவ்வேளையில், சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் ஒரு பெண், குடும்ப பாரம்பரியத்துடன் தொடர்புடைய எண்களை 10 ஆண்டுகளாக பயன்படுத்தி, RM3.1 மில்லியனுக்கும் அதிகமான தொகையை வென்றுள்ளார்.
இந்த வெற்றிகள், நமது அன்றாட வாழ்க்கை அனுபவங்களும் பாரம்பரியமும் கூட பெரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என்பதை காட்டுவதாக, Magnum நிறுவனத்தின் பிரதிநிதி தெரிவித்தார்.
“இம்மூவரின் வெற்றி, யார் வேண்டுமானாலும் தங்களுக்கே உரிய பாணியில் இந்த அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க முடியும் என்பதைக் நினைவூட்டுகிறது. காரணம், சில நேரங்களில், மிகவும் முக்கியமான எண்கள் ஏற்கனவே உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கலாம்”, என்றார் அவர்.



