Latestமலேசியா

50 ஆண்டுகால நினைவுகளை நினைவுக்கூறவுள்ள UKM முன்னாள் மாணவர்களின் ஒன்றுகூடல்; 2000ஆம் ஆண்டுக்கு பிறகு பயின்ற மாணவர்கள் கலந்துக்கொள்ள அழைப்பு

கோலாலாம்பூர், ஆகஸ்ட்-15 – வருகின்ற செப்டம்பர் 6 ஆம் தேதி, மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தின் Sutera Banquet மண்டபத்தில் யூ.கே.எம் முன்னாள் மாணவர்களின் ஒன்றுக்கூடல் நிகழ்வு மற்றும் இரவு உணவு விருந்து மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

50 ஆண்டுகால நினைவுகளை நினைவுக்கூறும் வகையில் நடைபெறும் இந்த விழாவில் 1973 முதல் 2024 ஆம் ஆண்டு வரை மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற முன்னாள் மாணவர்கள் கலந்துக்கொள்ளவிருக்கின்றனர்.

ஆண்டு விருந்து நிகழ்வு மட்டுமல்லாமல், UKM பல்கலைக்கழகத்தில் படித்து பல்வேறு துறைகளில் பீடு நடை போட்டு வரும் முன்னாள் மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வும் இந்த விழாவில் இணைந்து நடைபெறவுள்ளது.

இத்தகைய அற்புதமான நிகழ்வு வளர்ந்து வரும் அல்லது தற்போது பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவர்களுக்கு மிக பெரிய முன்னுதாரணமாய் அமையும் என்கிறார் நிகழ்வின் இயக்குனர் சரசா பலராமன்.

2015 இல் அமைக்கபெற்ற இந்த இயக்கம், யு.கே.எம் முன்னாள் மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் இந்திய சமுதாயத்திற்கு நலம் பயக்கும் பல்வேறு நிகழ்வுளைத் தொடர்ந்து நடத்தி வருவதாக யூகேஎம் i-அலும்னி ஆண்டு விருந்தின் தலைவர் முனியாண்டி பழனியப்பன் கூறுகின்றார்.

-Muniandy interview-

மேலும் இவ்விழாவில் கலந்துகொள்ள விரும்புவோர், வழங்கப்பட்ட QR இல் 150 ரிங்கிட் பணத்தைச் செலுத்த வேண்டுமென்றும், குறிப்பாக இளைஞர்களை அதிகம் எதிர்பார்ப்பதாகவும் இந்நிகழ்வின் இயக்குனர் Sarasa Balaraman தெரிவித்துள்ளார்.

-Sarasa interview-

Floral Theme அடிப்படையில் நடக்கவிருக்கும் இந்த ஒன்றுகூடல் விழா அனைத்து முன்னாள் மாணவர்களும் கலந்து
பழைய நினைவுகளைப் பகிர்ந்து, பழைய நட்புகளை மீண்டும் உயிர்ப்பித்து, புதிய அனுபவங்களை உருவாக்கும் ஒரு அரிய சந்தர்ப்பமான இருக்கும் என ஏற்பாட்டுக் குழு எதிர்பார்க்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!