
லண்டன், மார்ச்-7-பிரிட்டனின் Oxford பல்கலைக்கழகத்தின் Ashmolean அருங்காட்சியகம்,500 ஆண்டுகள் பழமையான திருமங்கை ஆழ்வார் வெண்கல சிலையை இந்தியாவுக்கே திருப்பி அனுப்பியுள்ளது.
16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இச்சிலை, தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
1967-ல் தனியார் சேகரிப்பாளரிடமிருந்து வாங்கப்பட்ட இச்சிலையின்
மூலத்தைப் பற்றி 2019-ல் சந்தேகம் எழுந்ததால் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது இந்தியாவிடமிருந்து எந்த கோரிக்கையும் வரவில்லை; இருந்தாலும் அருங்காட்சியகமே இந்திய உயர் ஆணையத்தைத் தொடர்புகொண்டு மேல்விவரங்களைக் கேட்டது.
பின்னர், சிலையைத் திருப்பித் தருமாறு 2020-ல் முறைப்படி கோரிக்கை வந்த நிலையில், 2024-ல் அதனை ஒப்படைக்க இணைக்கம் காணப்பட்டது.
இந்நிலையில், மார்ச் 3-ஆம் தேதி, லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில்
அதிகாரப்பூர்வமாக சிலை இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நடவடிக்கை, இந்தியா–இங்கிலாந்து கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதோடு,பழமையான மதப் பொருட்களை மீண்டும் தாயகத்திற்கு கொண்டுவரும் முயற்சியின் முக்கிய அங்கமாகும்.
Ashmolean அருங்காட்சியகத்தின் நல்லெண்ணத்திற்கு இந்தியத் தூதரக அதிகாரிகள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.



