6.37 மீட்டர் உயரக் கூரையிலிருந்து விழுந்து பராமரிப்பு மேலாளர் மரணம்

பட்டவொர்த், டிசம்பர்-4,
பினாங்கு பட்டவொர்த்தில் ஓர் உற்பத்தி தொழிற்சாலை வளாகத்தில் 6.37 மீட்டர் உயரக் கூரையிலிருந்து விழுந்து பராமரிப்பு மேலாளர் உயிரிழந்தார்.
49 வயது அந்த உள்ளூர் ஆடவர், நேற்று காலை வேலைசெய்து கொண்டிருந்தபோது, தவறுதலாக பழைய மற்றும் கிட்டத்தட்ட மக்கிபோன நிலையிலும் இருந்த ஒளி ஊடுருவக்கூடிய கூரையை மிதித்துள்ளார்.
இதனால் கூரையை பிய்த்துக் கொண்டு கீழே விழுந்தவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
இதையடுத்து, விசாரணை முடியும் வரை அங்கு உடனடியாக வேலை நிறுத்த உத்தரவை, JKKP எனும் வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அமுல்படுத்தியுள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து உள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதோடு, மேம்படுத்தப்பட வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தெரிவிக்க வேண்டுமென முதலாளித் தரப்பு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு விதி மீறல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் JKKP கூறியது.



