
கோத்தா பாரு, செப்டம்பர்-12 – கிளந்தான் பாச்சோக்கில் (Bachok) உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில், கார்ட்டூன் உடையில் இருந்த ஒருவன் 6 வயது சிறுமியை கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, தகாத முறையில் தொட்ட சம்பவம் வைரலாகியுள்ளது.
பந்தாய் இராமாவில் மாலை 6.20 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், பொது மக்களில் ஒருவர் அதனைக் கைப்பேசியில் பதிவு செய்ததாகவும் மாவட்ட போலீஸ் கூறியது.
இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார் 36 வயது சந்தேக நபரைக் கைதுச் செய்தனர்.
மேல் விசாரணைக்காக செப்டம்பர் 18 வரை அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.
இவ்வேளைல் மருத்துவ பரிசோதனையில் சிறுமிக்கு உடல் ரீதியாக எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என்பது உறுதிச் செய்யப்பட்டது.