Latestஉலகம்

67 பேருடன் சென்ற விமானம் கசக்ஸ்தானில் வெடித்துச் சிதறியது; 38 பேர் பலி

பக்கு, டிசம்பர்-26 – அசர்பைஜான் (Azerbaijan) நாட்டிலிருந்து ரஷ்யா செல்லும் வழியில் கசக்ஸ்தான் நாட்டில் பயணிகள் விமானம் வெடித்துச் சிதறியதில், குறைந்தது 38 பேர் பலியாயினர்.

பலத்த காயங்களுடன் 2 சிறார்கள் உட்பட 29 பேர் காப்பாற்றப்பட்டு, அவர்களில் 22 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விமானத்திலிருந்த 62 பயணிகள் மற்றும் 5 பணியாளர்களில் பெரும்பாலோர், ரஷ்ய எல்லை நாடுகளான கசக்ஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.

கிறிஸ்மஸ் நாளன்று தலைநகர் பக்குவிலிருந்து புறப்பட்ட அந்த Azerbaijan Airlines விமானம், கசக்ஸ்தானின் அக்தாவ் விமான நிலையமருகே அவசரத் தரையிறக்கத்தின் போது விபத்துக்குள்ளானது.

முன்னதாக நடுவானில் பறந்த போது கடும் பனி மூட்டம் நிலவியதால் வானில் வட்டமடித்த விமானத்தை, பாதை மாற்றி விட்டு அவசரமாகத் தரையிறக்க முடிவுச் செய்யப்பட்டது.

எனினும், தரையிறங்கும் போது விமானம் கட்டுப்பாட்டை இழந்து அசைந்து அசைந்து வந்து திறந்தவெளித் தரையில் மோதி தீப்பிடித்தது.

அதன் வீடியோக்கள் வைரலாகி நெஞ்சைப் பதற வைக்கின்றன.

பறவைகளை மோதியதே அவ்விபத்துக்குக் காரணமென உறுதிப்படுத்தப்படாத சில தகவல்களும் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், விமான விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய அசர்பைஜான், கசக்ஸ்தான் இரு நாடுகளுமே உத்தரவிட்டுள்ளன.

விசாரணைகள் முடியும் வரை ரஷ்யாவின் ச்செச்னியா (Chechnya) வட்டாரத்துக்கான அனைத்துப் பயணச் சேவைகளையும் Azerbaijan Airlines நிறுத்தி வைத்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!