கோலாலம்பூர், டிசம்பர் 14 – ஆண்டுதோறும் தேசம் இணைய ஊடகத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தேசம் ஐகோன் அனைத்துலக விருதளிப்பு விழா, நேற்று ஏழாவது முறையாக சிறப்பாக நடந்தேறியது.
பண்டார் சௌஜானா புத்ரா, மாஹ்சா பல்கலைக்கழக அரங்கில் நடந்த இந்த விழாவில் 50க்கு மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
அரசியல், கலைத்துறை, ஊடகத்துறை, வர்த்தகம், வாழ்நாள் சாதனையாளர் மற்றும் இவ்வருடத்திற்கான ICON of the year எனப் பல பிரிவுகளில் மக்களின் வாக்களிப்பின் மூலமும், நீதிபதிகளின் தேர்வின் அடிப்படையிலும் விருதுகள் அளிக்கப்பட்டன.
இவ்விழாவை தலைமையேற்றுத் துவக்கி வைத்த தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், ம.இ.காவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம். சரவணனுக்கு ‘Icon of Parliamentarian’ விருது வழங்கப்பட்டது.
அதேவேளையில், பிரபல இணையச் செய்தி ஊடகத்திற்கான விருதை வணக்கம் மலேசியா ஊடகத் தளம் வென்று பெருமை சேர்த்தது.
இதனிடையே, சிறந்த இணைய செய்தி வாசிப்பாளர் பிரிவில் வணக்கம் மலேசியா ஊடகத்தின் நிர்வாக இயக்குநர் தியாகராஜன் மற்றும் செய்திப் பிரிவுத் தலைவர் வேதகுமாரி ஆகியோரும் கெளவிக்கப்பட்டனர்.
இவ்விழாவில் சிறப்பு விருத்தினர்களாக, சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, பேராக் மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவநேசன், மாஹ்சா குழுமத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஹனிஃபா அப்துல்லாஹ் மற்றும் அதன் தலைமை செயல்முறை இயக்குநர் டாக்டர் அனிதா எனப் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.