
ஒஸ்லோ, ஜன 14 – அரோரா பொரியாலிஸ்’ அல்லது ‘வடக்கு விளக்குகளை’ காண சுற்றுலா வழிகாட்டி சேவைகளை சட்டவிரோதமாக வழங்கியதற்காக ஐந்து சீன நாட்டவர்களும் ஏழு மலேசியர்களும் நோர்வேயிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.
லோபோடென், (Lofoten ) ஓபோடென் ( Ofoten ) மற்றும் டிராம்ஸில் ( Troms ) நடந்த நடவடிக்கைகளில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்த அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாத அவர்களிடம் பணம் செலுத்தி போக்குவரத்தை மேற்கொண்டதாக பயணிகள் ஒப்புக்கொண்டனர்.
அவர்கள் இப்போது நோர்வே, ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் ஷெங்கன் (Schengen ) பகுதிக்குள் இரண்டு ஆண்டுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஷெங்கன் பகுதி என்பது 29 ஐரோப்பிய நாடுகளின் ஒரு மண்டலமாகும். இது அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையிலான எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகாரப்பூர்வமாக ரத்து செய்கிறது.
பொதுவான விசாவின் அடிப்படையில் அனைத்துலக பயணத்திற்காக ஒரே அதிகார அமைப்பாக இது அமைகிறது. ஏழு மலேசியர்களும் தங்களது சட்டவிரோத நடவடிக்கையின் மூலம் 100,000 Kroner ருக்கும் அதிகமாக அல்லது 40,220 மலேசிய ரிங்கிட்டை லாபமாக பெற்றுள்ளனர், என Nordland ,Gudjon Gudjonsson மாவட்ட போலீஸ் தலைவர் தெரிவித்தார். இவற்றில் போக்குவரத்து ,தங்கும் வசதி, வாகனம் மற்றும் சுற்றுலா வழிகாட்டிற்கான செலவும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டது.



