
கோலாலம்பூர், மார்ச்-28- மத்திய மியன்மாரை இன்று நண்பகல் வாக்கில் ரிக்டர் அளவைக் கருவியில் 7.4-காக பதிவாகிய வலுவான நில நடுக்கம் உலுக்கியுள்ளது.
மண்டலேயில் இருந்து தென்மேற்கே சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டது.
அதன் அதிர்வுகள் மலேசியாவின் மேற்குக் கரை மாநிலங்களிலும் உணரப்பட்டன.
பினாங்கு, பட்டவொர்த்திலும் நில அதிர்வு ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
இவ்வேளையில், மியன்மார் நிலநடுக்கத்தால் மலேசியாவுக்கு சுனாமி அபாயம் எதுவுமில்லை என வானிலை ஆராய்சித் துறையான MET Malaysia கூறியது.
இந்நிலையில் நில அதிர்வை உணர்ந்தவர்கள் இங்கே தங்களின் விவரங்களை நிரப்புமாறு MET கேட்டுக் கொண்டது.
மியன்மார் நிலநடுக்கம், தாய்லாந்தின் பேங்கோக்கிலும் உணரப்பட்டுள்ளது.
கட்டடங்கள் குலுங்கியதால் ஏராளமானோர் பீதியில் சாலைகளுக்கு ஓடிவந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.