70 கோல்ஃப் வீரர்கள் பங்கேற்கும் 5-ஆவது PNAGS தேசிய இறுதித் தொடர் 2025 – வெற்றியாளர்கள் தென் கொரியாவில் மலேசியாவை பிரதிநிதிப்பர்

பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர்-27,
மலேசியாவின் சிறந்த 70 அமெச்சூர் கோல்ஃப் வீரர்கள், PNAGS எனப்படும் 5-ஆவது பெரோடுவா நேஷனல் அமெச்சூர் கோல்ஃப் தொடரின் தேசிய இறுதிப் போட்டி 2025-க்கு தயாராகியுள்ளனர்.
இப்போட்டி செப்டம்பர் 29 மற்றும் 30-ஆம் தேதிகளில், பிரபல சவ்ஜானா கோல்ஃப் & கண்ட்ரி கிளப்பில் நடைபெறுகிறது.
Delta World நிறுவனம் நடத்தும் இந்தப் போட்டி, உள்ளூர் கோல்ஃப் வீரர்களுக்கான முக்கிய மேடையாக விளங்குகிறது.
இவ்வாண்டு சாம்பியன்கள், வரும் அக்டோபரில் தென் கொரியாவின் Jeju தீவில் நடைபெறும் உலக அமெச்சூர் கோல்ஃப் சாம்பியன்ஷிப் (WAGC) 2025-ல் மலேசியாவை பிரதிநிதித்து விளையாடுவர்.
செப்டம்பர் 28-ஆம் தேதி, சவ்ஜானா ஹோட்டலில் வரவேற்பு விருந்தும் கொடியேற்ற விழாவும் நடைபெறும்.
இந்த இரு-நாள் போட்டி, செப்டம்பர் 30-ஆம் தேதி பரிசளிப்பு விழாவுடன் நிறைவடைகிறது.
இவ்விழாவில் இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹானா இயோ, பரிசுகளை எடுத்து வழங்குவார்.
பெரோடுவா முதன்மை ஆதரவாளராக தொடர்ந்து ஆதரவு வழங்கி, அடிமட்டத்திலிருந்து கோல்ஃப் வளர்ச்சியை ஊக்குவித்து, மலேசிய வீரர்களுக்கு உலக மேடையில் பிரகாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது