
டில்லி, செப்டம்பர் 11 – டில்லியில் புதிய மஹிந்திரா (Mahindra) காரை வாங்கிய மகிழ்ச்சியில், இளம் பெண் ஒருவர் காரை சாலையில் ஓட்டிச் செல்லும் முன்பு, இந்துக்களின் வழக்கப்படி எலுமிச்சையை நசுக்கும் சடங்கை ஷோரூமிலேயே (showroom) செய்த சம்பவம் அவருக்கு அசம்பாவிதமாக மாறியது.
காரின் டயரின் கீழ் எலுமிச்சையை மிதிக்க வேண்டும் என்பதால், கார் ஸ்டார்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் அவர் டயரை நகர்த்த முயன்ற போது தற்செயலாக எண்ணெய்யை மிக வேகமாக அழுத்தியதால் கார் வேகமாக முன்னோக்கி பாய்ந்து, நேரடியாக ஷோரூமின் (showroom) முதல் மாடியிலிருந்து கீழே விழுந்தது.
புதிதாக வாங்கிய கார், வாங்கிய முதல் நாளே சேதமடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்த அனைவரும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.
இருந்தாலும் இந்த சம்பவத்தால் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.