
கோத்தா கினாபாலு, மார்ச்-4 – கினாபாலு மலையில் ஏறுபவர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்ய சபா மாநில அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை அமுல்படுத்தவிருக்கின்றது.
மலையேறிகளுக்கு வயதுக் கட்டுப்பாட்டை நிர்ணயிப்பதும் அவற்றிலடங்கும்.
மாநில சுற்றுலா, கலை, சுற்றுச் சூழல் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ கிறிஸ்தினா லியூ அதனைக் கோடி காட்டியுள்ளார்.
மலேசியாவின் அந்த உயரமான மலையிலிருந்து இறங்கும் போது பிரிட்டனைச் சேர்ந்த 70 வயது முதியவர் மயங்கி விழுந்து மரணமடைந்த சம்பவத்தை அடுத்து அவ்வாறு பரிசீலிக்கப்படுகிறது.
அச்சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த கிறிஸ்தினா, இது போன்ற துயரங்கள் நடப்பதைப் பார்க்க விரும்பவில்லை என்றார்.
இவ்வேளையில், மலையேறுபவர்களுக்கான காப்புறுதி பாதுகாப்புக் குறித்து கேட்ட போது, அது மலையேறிகளின் பொறுப்பு என்றார் அவர்.
கடந்தாண்டிலிருந்து இதுவரை குறைந்தது 4 மலையேறிகள் கினாபாலு மலையில் உயிரிழந்துள்ளனர்.