
கலிஃபோர்னியா, நவம்பர்-13, 8 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோலிவூட் திரையுலகிற்கு மீண்டும் வருகிறார் மேகன் மேர்கல்.
பிரிட்டன் இளவரசர் ஹேரியுடனான திருமணத்திற்குப் பிறகு Suits தொடரை விட்டு விலகிய அவர், இப்போது Amazon MGM Studios தயாரிக்கும் Close Personal Friends படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
Brie Larson, Lily Colins, Jack Quaid ஆகியோருடன் இணைந்து, அவரது நிஜ வாழ்க்கை கதாபாத்திரமாகவே மேகன் திரையில் தோன்றுகிறார்.
முன்பு CSI: NY, Fringe போன்ற தொடர்களிலும், Horrible Bosses போன்ற படங்களிலும் நடித்தவர், Suits தொடரில் Rachel Zane என்ற பாத்திரம் மூலம் புகழ் பெற்றார்.
இப்போது Netflix தொடரான With Love, Meghan மற்றும் அவரது வாழ்க்கை முறை முத்திரையான As Ever ஆகியவற்றுடன், மீண்டும் நடிப்பில் மேகன் களம் காண்பது அவரது இரசிகர்ளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



