
சைபர்ஜெயா, செப்டம்பர்-3- நாட்டின் முன்னணி இந்திய உணவகமாக உருவெடுத்துள்ள India Gate கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி தனது எட்டாவது நிறைவாண்டைக் கொண்டாடியது.
அதன் முதல் கிளையான சைபர்ஜெயாவில் வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் அக்கொண்டாட்டம் நடைபெற்றது.
அதே சமயம், அதன் அனைத்து 11 கிளைகளிலும் அன்று ஒரு நாள் முழுவதும் dine-in முறையில் அமர்ந்து உணவுண்ட வாடிக்கையாளர்களுக்கு 8 விழுகாடு விலைக் கழிவுச் சலுகையும் வழங்கப்பட்டது.
இந்த 8-ஆம் ஆண்டு வெற்றிப் பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நன்றித் தெரிவித்துக் கொண்ட India Gate நிர்வாக இயக்குநர் சரவணன் சுப்ரமணியம், தனது நீண்ட நாள் ஆசையான புற்றுநோய் அறக்கட்டளையைத் தொடங்கும் அறிவிப்பையும் வெளியிட்டார்.
இந்த India Gate புற்றுநோய் அறக்கட்டளை நாட்டிலுள்ள புற்றுநோயாளிகளின் நலன் காக்க உதவுமென, புற்றுநோயிலிருந்து மீண்டு வந்தவருமான சரவணன் சொன்னார். அறக்கட்டளைத் தொடக்க வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
இவ்வேளையில், தேசிய தினத்தை ஒட்டி, India Gate-சின் அனைத்து கிளைகளும் சுதந்திர உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு மலேசியக் கொடிகள் விநியோகம் செய்யப்பட்டன. சிறப்பம்சமாக மெர்டேக்கா இனிப்புகளும் வழங்கப்பட்டன.