கோலாலம்பூர், நவம்பர்-29 – மலேசிய வானிலை ஆராய்ச்சி மையமான MET Malaysia, 8 மாநிலங்களுக்கு நாளை வரை அடைமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கிளந்தான், திரங்கானு, பேராக், பஹாங், பெர்லிஸ், கெடா, பினாங்கு, ஜோகூர் ஆகியவையே அம்மாநிலங்களாகும்.
குறிப்பாக அபாயக் கட்டத்திலான அடைமழை கிளந்தானின் Tumpat, Pasir Mas, Kota Baru, Jeli, Tanah Merah, Bachok, Machang, Pasir Puteh, Kuala Krai ஆகிய இடங்களில் பெய்யும்.
திரங்கானுவிலும் பெருவெள்ளத்தைக் கொண்டு வரும் அடைமழை பெய்யுமென MET Malaysia கூறியது.
பேராக்கில் Hulu Perak, பஹாங்கில் Jerantut, Maran, Kuantan, Pekan, Rompin ஆகிய இடங்களுக்கு மோசமான கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
பெர்லிஸ், கெடா, பினாங்கு மாநிலங்களிலும் அடைமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் ஜோகூரில் Segamat, Mersing, Kota Tinggi உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்படலாம்.
நாட்டில் தொடரும் அடைமழையால் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் தற்போதைய நிலவரப்படி 9 மாநிலங்களில் 87,000 -கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.