லண்டன், அக்டோபர்-13 – கற்காலத்திற்கெல்லாம் முந்தைய ஆதிகாலத்தில் மனிதனின் சகோதர இனமான நியாண்டர்தால் (Neanderthals) மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் கடைசியாகப் பூமியில் தென்பட்ட வால் நட்சத்திரம், இவ்வாரக் கடைசியில் மீண்டும் காட்சியளிக்கவிருக்கிறது.
அக்டோபர் 12 முதல் 30 வரையில் தொலைநோக்கிகள் (binoculars) வாயிலாகவோ அல்லது வெறும் கண்களாலேயோ அதனைப் பார்க்கலாமென, அறிவியலாளர்களை மேற்கொள் காட்டி German Press செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
Comet A3 எனும் அந்த வால் நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக ஒளி வீசக் கூடியதென்பதால், the comet of the century அல்லது இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த வால் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
கடைசியாக 80,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு இந்தக் கிரகத்தில் தென்பட்ட அந்த வால் நட்சத்திரம், கடந்தாண்டு ஜனவரியில் தான் கண்டுபிடிக்கப்பட்டது.
DSLR கேமராவில் அந்த வால் நட்சத்திரத்தைப் படமெடுக்கும் சாத்தியம் இருப்பதையும் அறிவியலாளர்கள் மறுக்கவில்லை.