Latestமலேசியா

98-ஆவது ஆஸ்கார்: 6 விருதுகளை வாரிக் குவித்த One Battle After Another

கலிஃபோர்னியா, மார்ச்-16-அமெரிக்காவின், லோஸ் ஏஞ்சலஸில் இன்று நடைபெற்ற 98-ஆவது ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் சிறந்த படம் மற்றும் சிறந்த இயக்குநர் உள்ளிட்ட 6 விருதுகளை One Battle After Another வாரிக் குவித்தது.

இயக்குநர் Paul Thomas Anderson இந்த படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதைப் பெற்றார்.

சிறந்த துணை நடிகர் விருது One Battle After Another படத்திற்காக Sean Penn-னுக்கு வழங்கப்பட்டது.

சிறந்த நடிகருக்கான விருது Sinners படத்திற்காக Michael B Jordan வென்ற வேளை, சிறந்த நடிகைக்கான விருது Hamnet படத்திற்காக Jessie Buckley-க்குக் கிடைத்தது.

சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருது Netflix தயாரித்த KPop Demon Hunters படத்திற்குக் கிடைத்தது. அதே படத்தின் “Golden” பாடல் சிறந்த அசல் பாடலுக்கான விருதைப் பெற்றது.

சிறந்த துணை நடிகைக்கான விருது Weapons படத்திற்காக Amy Madigan-னுக்கும் வழங்கப்பட்டது.

சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான விருதை நோர்வேயின் ‘Sentimental Value’ வாகை சூடியது.

அவ்விருதினை ஹோலீவூட் – போலீவூட் திரைத் தாரகை பிரியங்கா சோப்ரா-வும் நடிகர் Javier Bardem-மும் எடுத்து வழங்கினர்.

10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்கார் மேடையேறி பிரியங்கா விருது வழங்கியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!