Latestமலேசியா

99 Speed Mart-டில் 5.02% பங்குகளை வாங்கிய EPF

கோலாலம்பூர், ஜூன்-10 – ஊழியர் சேமநிதி வாரியமான EPF, 99 Speed ​​Mart Retail Holdings Bhd-டின் 421.79 மில்லியன் ரிங்கிட் பங்குகளை வாங்கி, அந்நிறுவனத்தின் முதன்மைப் பங்குத்தாரராகியுள்ளது.

அந்த பல்பொருள் விற்பனைக் கட்டமைப்பில் இது 5.02% நேரடி பங்குரிமையாகும்.

ஜூன் 4-ஆம் தேதி வாங்கப்பட்ட அப்பங்குகள் Citigroup Nominees (Tempatan) Sdn Bhd. நிறுவனத்தின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக, மலேசியப் பங்குச் சந்தைக்கு அனுப்பிய தகவலில் EPF உறுதிப்படுத்தியது.

99 Speed Mart இன்று நாட்டின் மிகப் பெரிய சூப்பர் மார்கெட் கட்டமைப்பாக வளர்ந்து நிற்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!