கோலாலம்பூர், செப்டம்பர் 3 – கோலாலம்பூரிலுள்ள ஐந்து நன்கு அறியப்பட்ட உணவகங்கள், மலேசியாவின் ஹலால் சான்றிதழ் கொண்டிருக்கவில்லை என்று தெரியவந்துள்ளது.
சில உணவு வளாகங்களின் ஹலால் நிலை குறித்து SISPAA எனும் ஜாக்கிமின் (Jakim) பொது புகார் மேலாண்மையில் கேள்விகள் எழுப்பப்பட்டன.
அதனை தொடர்ந்து, ஜாக்கிமின் MyeHALAL அமைப்பின் அடிப்படையில் அந்த உணவு வளாகங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டு தகவல் வெளியிடப்பட்டதாக, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை தெரிவித்திருக்கிறது.
எந்தவொரு வளாகம் அல்லது தயாரிப்புக்கான ஹலால் நிலையையும், பயனர்கள் மலேசிய ஹலால் இணைப்பின் வழி அறிந்துகொள்ளலாம் என்று தெரிவித்தது.