
கோலாலம்பூர், அக்டோபர்-24, மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia, தீபகற்ப மலேசியாவில் 7 இடங்களுக்கு முதல் கட்ட வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பேராக்கில் லாருட், மாத்தாங், குவாலா கங்சார், சிலாங்கூரில் கோம்பாக் மற்றும் பெட்டாலிங், புத்ராஜெயா, பஹாங்கில் மாரான் மற்றும் தெமர்லோ ஆகியவே அவ்விடங்களாகும்.
அப்பகுதிகளில் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு 35 முதல் 37 பாகை செல்சியஸுக்கு வெப்ப நிலை பதிவாகும்.
தத்தம் பகுதிகளுக்கான தினசரி வெப்பநிலை குறித்த ஆகக் கடைசி தகவல்களுக்கு, https://www.met.gov.my/iklim/status-cuaca-panas/ என்ற Met Malaysia-வின் இணைய அகப்பக்கத்தை வலம் வரலாம்.