Latestமலேசியா

மார்ச் 2025ஆம் ஆண்டு முதல் பாரிஸுக்கு நேரடி விமான சேவை – மலேசியன் ஏர்லைன்ஸ்

கோலாலம்பூர், செப்டம்பர் 6 –அடுத்த ஆண்டு மார்ச் 22ஆம் திகதி முதல் KLIA டெர்மினல் 1-லிருந்து பாரிஸில் உள்ள Charles de Gaulle விமான நிலையத்திற்கு நேரடி விமான சேவைகளை மலேசியன் ஏர்லைன்ஸ் வழங்கவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.

மலேசியன் ஏர்லைன்சை ஐரோப்பா வரை விரிவாக்கம் செய்யும் இந்த முக்கிய சேவையானது, வாராத்திற்கு 4 விமான சேவைகளுடன் இயக்கும் என்று அது அறிவித்திருக்கிறது.

மலேசியன் ஏர்லைன்ஸின் 68ஆவது இலக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பாரிஸ்சுக்கான புதிய வழித்தடம், அதன் ஏர்பஸ் A350-900 வழி சேவை வழங்கப்படும் என மலேசியன் ஏவியேஷன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் கேப்டன் இஷாம் இஸ்மாயில் (Capt Izham Ismail) தெரிவித்தார்.

இதன் வழி ஐரோப்பாவிலுள்ள ஒரு நகரத்திற்கு நேரடி சேவையைத் தொடங்கும் முதல் விமான நிறுவனமாக இது வலம் வரும் என இன்று 2024ஆம் ஆண்டிற்கான MATTA அனைத்துலக கண்காட்சியில் அவர் கூறினார்.

இதனிடையே, இன்று தொடங்கி, செப்டம்பர் 8 வரை, மலேசிய அனைத்துலக வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் MATTA கண்காட்சியில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மலேசிய ஏவியேஷன் குழுமத்தின் தலைமை வணிக அதிகாரி Dersenish Aresandiran அழைப்பு விடுத்திருக்கிறார்.
இந்த MATTA கண்காட்சியில், மலேசியன் ஏர்லைன்ஸ், Firefly, MASwings, Journify, Enrich உட்பட பல்வேறு பயண சேவைகளுக்கான சலுகைகளும் இருப்பதாக அவர் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!