Latestஉலகம்

குஜராத்தில் கடும் மழை வெள்ளத்துக்குப் பிறகு பரவும் மர்ம காய்ச்சல்; இதுவரை 16 பேர் பலி

குஜராத், செப்டம்பர் -13 – இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பரவிய மர்ம காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் காந்தி நகரிலிருந்து 380 கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும்  சில கிராமங்களில் அக்காய்ச்சல் பரவியுள்ளது.

அண்மையில் கன மழைக்குப் பிறகு ஏற்பட்ட பெருவெள்ளத்தை அடுத்தே, அந்த மர்ம காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகின.

இதுவரை 60-கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட சுகாதார அதிகாரி கூறினார்.

என்ற போதிலும், காய்ச்சல் பரவியதற்கான உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

இறந்தவர்களிடம் பெரும்பாலும் நுரையீரல் பாதிப்பு காணப்பட்டது.

இறப்புகள், தூய்மைக்கேடு அல்லது தொற்று நோயால் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

எனவே இறப்புக்கானக் காரணத்தைக் கண்டறிய, இறந்தவர்களின் இரத்த மாதிரிகளை சோதனைக்காக அனுப்பியுள்ளோம்.

ஓரிரு நாட்களில் முடிவுகள் வந்ததும், இது ஏற்கனவே உள்ள கிருமியா அல்லது புதிய வைரசா என தெரிய வருமென அதிகாரி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!