கோலாலம்பூர், செப்டம்பர் -13 – கணவரின் iPhone-னில் அழிக்கப்பட்ட அந்தரங்க வீடியோக்கள், திடீரென இணையத்தில் விற்கப்படுவது கண்டு மலேசியப் பெண்ணொருவர் அதிர்ந்து போயுள்ளார்.
கைப்பேசி கடையொன்றில் கணவரின் iPhone விற்கப்பட்டது; ஆனால், அதற்கு முன்பே அதிலிருந்த அனைத்து உள்ளடகங்களையும் அழித்து விட்டோம்.
கணவருடன் தனித்திருந்த போது பதிவுச் செய்யப்பட்ட அந்தரங்க வீடியோக்களும் அவற்றில் அடங்கும்.
அதோடு, Apple ID-யிலிருந்தும் அவர் வெளியேறி விட்டார்.
இப்படியிருக்க, எங்களின் அந்தரங்க வீடியோக்கள் எப்படி இணையத்தில் கசிந்திருக்க முடியும்? அடுத்து என்ன செய்வது என்பது குறித்து யாராவது ஆலோசனைக் கூறுங்கள் என, அப்பெண் Instagram anonymous பதிவில் கூறினார்.
இச்சம்பவம், முறையற்ற தரவு நீக்கத்தால் ஏற்படும் அபாயங்களை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
எனவே, இன்னமும் பயன்படுத்தக் கூடிய நிலையில் உள்ள கைப்பேசிகளை முன்பின் தெரியாதோரிடம் விற்க வேண்டாம்;
தரவுகள் மீட்டெடுக்கப்படுவதைத் தவிர்க்க, முடிந்தவரை அவற்றை அழித்து விடுமாறு நிபுணர்கள் பரிந்துரைத்திக்கின்றனர்.
அதே சமயம், தம்பதிகளும் தனிப்பட்ட வீடியோக்களை பதிவுச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.
அப்படியே ஏதாவது வெளியில் கசிந்தால் அது குறித்து மலேசியத் தொடர்பு-பல்லூடக ஆணையத்திடம் (MCMC) புகாரளிக்க வேண்டுமென ஆலோசனைக் கூறப்பட்டுள்ளது.