போர்ட் கிள்ளான், செப்டம்பர் 19 – தேசிய மலேசியச் சுங்கத்துறை மேற்கொண்ட தனித்தனியான அதிரடி சோதனைகளில் 6.37 மில்லியன் மதிப்புள்ள சொகுசு வாகனங்கள், போதைப்பொருள், மதுபானம், நிகோடின் திரவம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கடந்த ஜூலை முதல் ஆகஸ்ட் வரை மேற்கொள்ளப்பட்ட ‘Op Longkai’ சோதனையின் வழி, போர்ட் கிள்ளானிலுள்ள ஒரு கிடங்கிலிருந்து முறையான உரிமம் இல்லாத 11 சொகுசு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
3.69 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 5 Mercedes Benz உட்பட 2 mini copper, Porsche, Range Rover, Toyota Alphard, Suzuki Jimny ஆகிய வாகனங்கள் நான்கு வருடங்களுக்கு முன்பே நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதனிடையே, கடந்த செப்டம்பர் 2ஆம் திகதி, 1.15 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வரி ஏய்ப்பு செய்யப்பட்ட மதுபானங்களைக் கொண்ட இரண்டு கொள்கலன்களையும் சுங்கத்துறை கைப்பற்றியது.
அதனை தொடர்ந்து, கிருமிநாசினி திரவம் எனத் தெரிவிக்கப்பட்ட மற்றொரு கொள்கலனிலிருந்து, 1.31 மில்லியன் மதிப்புள்ள பாட்டில்களில் 13,100 கிலோகிராம் நிகோடின் திரவத்தைக் கைப்பற்றப்பட்டது.
மற்றொரு வழக்கில், கோலாலம்பூர் விமான நிலைய அஞ்சல் மையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 13,955 மதிப்புள்ள போதைப்பொருளைப் பிடித்துள்ளனர்.
விசாரணையில் அனுப்பியவர் மற்றும் பெறுநரின் முகவரிகள் போலியானது என்பது தெரியவந்துள்ளது.