Latestமலேசியா

“சுட்டா தலை எனக்கு” மலேசிய திரைப்படம்; இன்று முதல் திரையரங்குகளில்

கோலாலம்பூர் மே 15 – மலேசியாவில் தயாரிக்கப்பட்ட ” சுட்டா தலை எனக்கு” என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி இன்று LFS PJ State திரையரங்கில் வெற்றிகரமாக வெளியீடு கண்டது. Creative Industry Consultants நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் Finas எனப்படும் தேசிய திரைப்பட நிறுவனத்தின் முன்னாள் இயக்குனருமான Datuk Kamil Othman மற்றும் டிக்கெட் ஆதரவாளரான தொழில்முனைவர் ராஜேஸ்வரன் ஆகியோர் பிரமுகராக கலந்துகொண்ட இந்த முன்னோட்ட காட்சியில் சுமார் 40 பேர் கலந்து கொண்டனர்.

மலேசியாவில் இதுவரை வெளியான தமிழ் திரைப்படங்களில் அதிகமான action நிறைந்த திரைப்படமாக இந்த படத்திற்கு FINAS மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது .

Margaya தீவைச் சேர்ந்த பணக்கார பங்குதாரர்களின் கடத்தல் நடவடிக்கைகளும் அதனை தடுக்கும் உள்ளூர் கும்பலுக்கும் சுற்றுப்பயணிகளைக் கொண்ட குழுவுக்கும் நடக்கும் போராட்டத்தை சித்தரிக்கும் வகையில் இந்த திரைப்படம் மிகவும் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் எடுக்கப்பட்டுள்ளது.

சாதுரியன் மற்றும் பரமபதம் போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த சாய் நந்தினியின் மூவி நிறுவனத்த சேர்ந்த டாக்டர் லட்ச பிரபு கைவண்ணத்தில் உருவான இப்படத்தின் இயக்குநராக தனேஸ் பிரபு பணியாற்றியுள்ளார்.

விக்னேஸ் பிரபு, ஜீ குட்டி, சாமராஜ், ரிசிகேஷன், நிர்மலா ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு எம் . ஜெகதீஸ் இசையமைப்பாளராகவும் , ஸ்டண்ட இயக்குநராக Eddy Sharizan பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் நடிகர்களான Samuel Sam , Jee Kutty மற்றும் Nirmala Tharmarajan ஆகியோர்
வணக்கம் மலேசியாவுக்கு வழங்கிய சந்திப்பில் தங்களது சுவையான அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கும் இசையமைப்பாளர் M . ஜெகதீஸ் தனது அனுபவத்தையும் பகிர்ந்துக் கொண்டார்.

முழுக்க முழுக்க Action பாணியிலான இந்த திரைப்படம் நமது மண்ணின் நட்சத்திரங்களின் நடிப்புக்கும் அவர்களது திறமைக்கும் மற்றொரு சவாலாக அமைந்துள்ளது. இந்த திரைப்படத்திற்கு உள்ளூர் ரசிகர்களின் பாராட்டும், ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என நம்பலாம்.

இன்று வெளியீடு கண்டுள்ள இத்திரைப்படத்தை நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் கண்டு களிக்கலாம்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!