Latestமலேசியா

மஸ்ஜித் இந்தியா நில அமிழ்வுப் பகுதியைப் பழுதுப் பார்க்க 3-6 மாதங்கள் அவசியமானதே என்கிறார் அமைச்சர்

கோலாலம்பூர், செப்டம்பர் -21 – தலைநகர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் நிலம் உள்வாங்கியப் பகுதி நெடுகிலும் பழுதுப் பார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளை முடிக்க மூன்றிலிருந்து ஆறு மாதங்கள் பிடிக்குமென்பது ஒரு நியாயமான காலக்கட்டமே.

எனவே, அனைவரின் பாதுகாப்புக் கருதி அங்குள்ள வியாபாரிகள் சற்று பொறுமைக் காக்க வேண்டுமென, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr சாலிஹா முஸ்தாஃபா (Dr Zaliha Mustafa) கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்பணிகள் இவ்வாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என ஜாலான் மஸ்ஜித் இந்தியா வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது அமைச்சர் அவ்வாறு சொன்னார்.

இவ்வேளையில் பாதுகாப்புக் குறித்து வியாபாரிகள் கவலைகொள்வது குறித்து கருத்துரைத்தை Dr சாலிஹா, மஸ்ஜித் இந்தியா மக்கள் நடமாட்டத்திற்கு இன்னமும் பாதுகாப்பானதே என மீண்டும் உத்தரவாதம் அளித்தார்.

ஜாலான் மஸ்ஜித் இந்தியாவை மறுசீரமைக்க 6 மாதம் என்பதெல்லாம் சற்று அதிகபட்சம் என்றும், இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெற இவ்வாண்டே அப்பணிகள் முழுமைப் பெற வேண்டுமென்றும் மஸ்ஜித் இந்தியா வியாபாரிகள் சங்கம் முன்னதாக வலியுறுத்தியிருந்தது.

டிசம்பர் முதல் மார்ச் வரையிலான ஹரி ராயா காலக்கட்டத்தில் தான் வியாபாரம் சூடு பிடிக்கும் என்பதை அச்சங்கம் சுட்டிக் காட்டியது.

பழுதுப் பார்ப்புப் பணிகளுக்காக சாலை மூடப்பட்டுள்ளதால் வியாபாரம் 80% நட்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!