புத்ராஜெயா, செப்டம்பர் 23 – டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நோய் பரவிய 37வது வாரத்தில், 1,794-ஆகக் குறைந்துள்ளது எனச் சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் முஹம்மட் ராட்ஸி அபு ஹாசன் (Datuk Dr. Muhammad Radzi Abu Hassan) தெரிவித்தார்.
முந்தைய வாரத்தில் டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,870-ஆக பதிவாகியிருந்தது.
இந்த வாரத்தில் டிங்கிக் காய்ச்சல் சம்பவங்கள் குறைந்ததோடு, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.
2023-ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் நாட்டில் மொத்தம் 84,865 பேர் டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.
இவ்வாண்டு நாட்டில் மொத்தம் 100,236 பேர் டிங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு 59 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இவ்வாண்டு டிங்கிக் காய்ச்சலால் 89 இறப்புகள் பதிவாகியுள்ளன.