Latestமலேசியா

இசை வழி சங்க தமிழை நவீன இசையில் உணர வைத்த தமிழ் ஓசை நிகழ்ச்சி – டத்தோ ஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர், செப்டம்பர் 23 – கடந்த செப்டம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை, Victory event ஏற்பாட்டில், தமிழ் ஓசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக நடந்தேறியது.

சங்ககால இலக்கியங்களை நவீன இசையிலும் படைக்க முடியும் என்பதை மிகவும் நேர்த்தியாகவும் இனிமையாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளரும் இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தனின் படைப்பில் பறைசாற்றியது இந்நிகழ்ச்சி.

நம் நாட்டு இசை பயிற்சி மையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு, ஜேம்ஸ் வசந்தன் முறையே பயிற்சிகளை வழங்கி, அவரின் இசைக்குழு மாணவர்களோடு இந்நிகழ்ச்சியில் பாடல்கள் அரங்கேற்றப்பட்டது.
Students’ performance videos

குமரேஷ் தலைமையில், சங்க இலக்கியங்களை, நவீன இசை வடிவில், இந்த தலைமுறையினரும் கேட்டு மகிழ ஒரு சிறந்த இசை படைப்பாக இந்நிகழ்ச்சி அமைந்ததாக, சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ம.இ.காவின் தேசியத் துணைத்தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன், தெரிவித்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் கலைத்துறை, எழுத்துத்துறை, ஒலிப்பரப்புத்துறை, ஆன்மிகத்துறை போன்ற துறைகளில் 13 பேருக்கு “தமிழ் ஓசை வாழ்நாள் சாதனையாளர் விருது” கொடுத்து கெளரவிக்கப்பட்டதையும் அவர் நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டினார்.
Speech – Saravanan

Closing
இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களோடு தமிழ் பற்றாளர்களும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!