Latestமலேசியா

நமது குழந்தைகள் திட்டம்; நாடளாவிய நிலையில் 83,000-கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவர்

பாத்தாங் காலி, செப்டம்பர் -27,

கல்விப் பெறுவதிலிருந்து மாணவர்கள் விடுபடுவதைத் தவிர்ப்பதற்காக தொடங்கப்பட்ட நமது Program Anak Kita அதாவது குழந்தைகள் திட்டத்தின் முதல் கட்ட அமுலாக்கத்தின் வழி நாடு முழுவதும் 3,458 பள்ளிகளைச் சேர்ந்த 83,752 மாணவர்கள் பயன்பெறுவர்.

3M எனப்படும் வாசித்தல், எழுதுதல், எண்ணுதல் ஆகிய மூன்று அம்சங்கள், SPM மற்றும் கல்வியில் விடுபட்ட மாணவர்களை அத்திட்டம் உள்ளடக்கியிருக்கும் என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) தெரிவித்தார்.

3M திட்டத்தில் ஜோகூர், பேராக், சிலாங்கூர், கிளந்தான், கெடா, சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் இரண்டாமாண்டு முதல் ஆறாமாண்டு சிறப்பு மீட்சி வகுப்புகளைச் சேர்ந்த 53,252 மாணவர்கள் சம்பந்தப்படுவர்.

அதே சமயம் நாடளாவிய நிலையில் SPM திட்டத்தில் பத்தாயிரம் ஐந்தாம் படிவ மாணவர்களும், இருபதாயிரம் நான்காம் படிவ மாணவர்களும் ஈடுபடுவர்.

கல்வியில் விடுபட்ட மாணவர்களுக்கான திட்டத்தில் சிலாங்கூர், கெடா, ஜோகூர், பஹாங், சபா, சரவாக் ஆகிய 6 மாநிலங்களில் 500 மாணவர்கள் சம்பந்தப்படுவர்.

இந்த நமது குழந்தைகள் திட்டத்தை முன்னதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காணொளி காட்சி வாயிலாகத் தொடக்கி வைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!