Latestமலேசியா

ஈப்போவில் வீட்டிலிருந்த MPV கார் நூதனமாகத் திருடப்பட்டது; சந்தேக நபருக்கு போலீஸ் வலை வீச்சு

ஈப்போ, அக்டோபர்-1, பேராக், ஈப்போ, ஜெலாப்பாங்கில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட MPV ரக Toyota Alphard கார் நூதனமாக களவாடப்பட்ட சம்பவம் குறித்து போலீசுக்கு புகார் கிடைத்துள்ளது.

சனிக்கிழமை அதிகாலையில் புகார் கிடைக்கப் பெற்றதை ஈப்போ போலீஸ் தலைவர் ACP Abang Zainal Abidin Abang Ahmad உறுதிப்படுத்தினார்.

சந்தேக நபர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

மோட்டார் வாகனத்தைத் திருடியதன் பேரில் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அதிகாலை 3.50 மணிக்கு தொலைதூர கட்டுப்பாட்டுக் கருவியின் (remote control) மூலம் வீட்டின் இரும்பு வேலியைத் திறந்து, அங்கிருந்த MPV காரை சந்தேக நபர்கள் இலாவகமாகத் திருடுவதை, குடும்பத்தார் வீட்டுக்குள்ளிருந்து வீடியோ எடுத்துள்ளனர்.

நாங்கள் கத்திக் கூச்சலிட்டும் அவர்கள் பயப்படவில்லை. 5 முதல் 7 வினாடிகளுக்குள் கார் இயந்திரத்தை இயக்கி அதனுடன் கம்பி நீட்டினர்.

அவர்களிடம் சுடும் ஆயுதங்கள் ஏதும் இருந்து அல்லது வெளியே ஒரு கும்பலே காத்திருந்து, அதனால் தங்களுயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்ற பயத்திலேயே வீட்டை விட்டு வெளியே வரவில்லை என, பாதிக்கப்பட்டவர் சமூக ஊடகத்தில் பதிவேற்றிய வீடியோவில் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!