கோலாலம்பூர், அக்டோபர்-3, கோலாலம்பூர் செராஸ் – காஜாங் நெடுஞ்சாலை அருகே, Kampung Batu 10-வில் நேற்றிரவு ஏற்பட்ட நீர்பெருக்கில் ஒரு சிறுவன் உள்ளிட்ட ஐவர் சிக்கிக் கொண்டனர்.
இரவு 9 மணி வாக்கில் தகவல் கிடைத்து 6 பேருடன் வந்த பண்டார் துன் ஹுசேய்ன் தீயணைப்பு-மீட்புத் துறை, ஆற்றின் மறுகரையில் சிக்கியிருந்த ஐவரையும் ஏணிகளின் உதவியுடன் காப்பாற்றியது.
கரையைத் தாண்டி வந்தவர்களில் மூவர் ஆண்கள், ஒருவர் பெண், இன்னொருவர் சிறுவனாகும்.
ஐவருக்கும் காயமேதும் ஏற்படவில்லை என உறுதிபடுத்தப்பட்டது.