
சோல், மார்ச் 6 – தவறான ஒருங்கிணைப்பின் காரணமாக இரண்டு KF -16 போர் விமானங்கள் பயிற்சி மேற்கொண்ட பகுதிக்கு வெளியே 8 குண்டுகளை வீசியதில் 29 பேர் காயம் அடைந்ததாக தென் கொரிய தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.
Pocheon னில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் இன்று காலைவரை 15 பொதுமக்களில் இருவரும், ராணுவ வீரர்களில் 14பேரும் காயம் அடைந்தாக தற்காப்பு அமைச்சின் அதிகாரியை மேற்கோள் காட்டி Yonhap செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது.
ஒரு போர் விமானத்தின் விமானி இலக்கிடப்பட்ட இடத்தைவிட தவறான இடத்தில் நுழைந்து குண்டுகளை வீசியதாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்ததாக விமானப் படை தகவல்கள் கூறின.
இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக அதிகாரிகள் இன்னமும் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.