கோலாலம்பூர், அக்டோபர் 5 – மங்கலத் திருநாளான தீபாவளி வந்துவிட்டால், தீபாவளி சந்தைகள் களைகட்டிவிடும்.
அவ்வகையில், Pads Sound Lightning மற்றும் Legend Imperium ஏற்பாட்டில் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்டில், ஸ்கோத் முருகன் தீபாவளி திருவிழா 2024 (Scott Murugan Deepavali Carnival) எனும் தீபாவளி சந்தை விமரிசையாக நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு, எதிர்வரும் அக்டோபர் 15 முதல் 30ஆம் திகதி வரை Sonali பேரங்காடிக்கு அருகில் நடைபெறவுள்ள இந்த சந்தைக்கான முகப்பிடங்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன.
சுமார் 50 கடைகளுடன், மலிவான விலையில், Rela வசதிகளுடன் வாடகைகளுக்கு முகப்பிடங்கள் வழங்கவுள்ளதாக அதன் ஏற்பாடுக் குழு தலைவர் பாலன் கூறினார்.
Interview
ஸ்கோத் முருகன் தீபாவளி திருவிழாவில் வியாபாரிகள் தங்களின் வியாபாரத்தை முன்னெடுக்க விரும்பினால், அவர்களுக்கான வியாபார முகப்பிடங்களை திரையில் காணும் தொடர்பு எண்களுக்குத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.
இதில் குழுக்கல் முறையில் கடைகள் வழங்கப்படாது என்றும் First Come first serve என்ற முறையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் அவர்.
கோலாலம்பூர் மாநகர மன்றத்தின் முழு ஒத்துழைப்புடன் ஏற்பாடுச் செய்யப்பட்டுள்ள இச்சந்தையில், பலதரப்பட்ட தீபாவளிக்கான அலங்கார பொருட்கள், பலகாரங்கள், ஆடைகள் போன்றவை விற்கப்படும் என்றார் பாலன்.
அதுமட்டுமல்லாமல், அக்டோபர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை உள்ளூர் கலைஞர்களின் ஆடல் பாடல் எனக் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறவிருக்கிறது.
உற்றார் உறவினர், நண்பர்கள் ஆகியோருடன் இணைந்து மகிழ்ச்சியில் திளைக்க, ஒன்றுகூடும் ஓர் இடமாக அமைய வேண்டும் என்ற நோக்கில் நடைபெறவுள்ள இந்த ஸ்கோத் முருகன் தீபாவளி சந்தைக்கு, பொதுமக்கள் பெரு வாரியாக கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.