அலோர் ஸ்டார், அக்டோபர் -11 – கெடா, பொக்கோ செனா சிறைச்சாலையில் பிரம்படி வழங்கப்பட்ட பிறகு கைதி மரணமடைந்த சம்பவத்திற்கு, இரத்தத்தில் ஏற்பட்ட கிருமி தொற்றே காரணமாகும்.
தொடக்கக் கட்ட சவப்பரிசோதனையில் அது அது உறுதிச் செய்யப்பட்டதாக, மலேசிய சிறைச்சாலைத் துறை கூறியது.
பிரம்படி பெற்ற செப்டம்பர் 25-ஆம் தேதியிலிருந்து சரியாக 9-வது நாளில் தனக்கு உடம்பு சரியில்லை என அக்கைதி கூறினார்.
உடனடியாக மருத்துவ அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது.
மேல் சிகிச்சைக்காக அக்டோபர் 7-ம் தேதி சுல்தானா பாஹியா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
அவருக்கான பிரம்படி தண்டனை அனைத்து SOP நடைமுறைகளையும் பின்பற்றியே மேற்கொள்ளப்பட்டது.
தண்டனைக்குப் பிறகும், அவரின் காயத்திற்கு தினமும் மருந்து போடப்பட்டு, உடல்நிலை அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இருந்தாலும் SOP மீறல்கள் இருந்ததா என்பதை கண்டறிய உள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.
அப்படி இருந்தது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் சிறைச்சாலைத் துறை உத்தரவாதமளித்தது.