புது டெல்லி, அக்டோபர்-12, அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையை நெருங்கி வரும் கமலா ஹாரீசை கொண்டாடும் நிகழ்வில், ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசைக் கச்சேரி நடக்கவுள்ளது.
ரஹ்மானுடன் ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பெயரில் உலகத் தரத்திலான இசைக் கச்சேரிக்கு, இந்திய அமெரிக்க நன்கொடைத் திரட்டும் அமைப்பான AAPI ஏற்பாடு செய்துள்ளது.
இசை நிகழ்ச்சி இணையத்தில் நேரலையும் செய்யப்படவுள்ளதாக AAPI தனது X தளத்தில் தெரிவித்துள்ளது.
எனினும் கச்சேரிக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.
என்றாலும், அந்நேரடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்க பதிவு செய்வதற்கான இணைப்பை AAPI வழங்கியுள்ளது.
நவம்பர் மாத அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் கமலாவுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்புக்கும் இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
ஆகக் கடைசி கருத்துக் கணிப்புகளில் டிரம்ப்பை விட சில புள்ளிகள் வித்தியாசத்தில் கமலா முன்னணி வகிக்கிறார்.
அதிபர் தேர்தலில் வென்றால், அமெரிக்கா மட்டுமின்றி உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த பெண்ணாக 60 வயது கமலா வரலாற்றில் இடம் பெறுவார்.