
மலாக்கா, அக் 23 – இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மலாக்கா தெங்கா மற்றும் அலோர் காஜாவைச் சுற்றி 22 வீடுகளை உடைத்து கொள்ளையிட்ட சந்தேகத்தின் பேரில் சீச்சாக் ( Cicak ) என்ற ஆடவனை போலீசார் கைது செய்தனர்.
42 வயதுடைய அந்த நபர் அங்கசா நூரியில் உள்ள ஹோட்டல் அறையில் இம்மாதம் 16ஆம் தேதி மாலை மணி 4.20 அளவில் கைது செய்யப்பட்டதாக மலாக்கா போலீஸ் துணைத் தலைவர் டத்தோ
முகமட் நஸ்ரி ஸவாவி (Md Nazri Zawawi ) தெரிவித்தார்.
அவனிடமிருந்து 150,000 ரிங்கிட் மதிப்புள்ள நகைகள் , கைதொலைபேசிகள் , பிராண்டட் ஆடைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் உட்பட பல்வேறு பொருட்களையும் போலீசார் கைப்பற்றினர். போதைப் பொருளை பயன்படுத்தியுள்ள அந்த நபர் ஏற்கனவே வீடு புகுந்து கொள்ளையிட்டது உட்பட 14 குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளதாக முகமட் நஸ்ரி கூறினார்.