அங்காரா, அக்டோபர்-24 – துருக்கி தலைநகர் அங்காராவில் உள்ள விண்வெளி நிறுவனத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில், ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் 22 பேர் அதில் காயமடைந்ததாக அந்நாட்டு தொலைக்காட்சிகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்திய ஓர் ஆணும் பெண்ணும் போலீசால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இருவரும் ஒரு டேக்சியில் சம்பவ இடம் வந்திறங்கியதாகக் கூறப்படுகிறது.
அவ்வாடவன் துப்பாக்கியுடன் நடந்துசெல்வது CCTV கேமராவிலும் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் போது மிகப்பெரிய வெடிப்புச் சத்தம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
அத்தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு தரப்பும் பொறுப்பேற்கவில்லை.
எனினும் குர்டிஸ்தான் கிளர்ச்சிக்காரர்கள் மீதே அரசாங்கத்திற்கு சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக துருக்கி தற்காப்பு அமைச்சர் சொன்னார்.