
போர்டிக்சன், அக்டோபர்-25 – மதுபோதையிலிருந்த காரோட்டி மோதியதில் போர்டிக்சன் தேசியப் பள்ளியின் ஐந்தாமாண்டு மாணவன் காயமடைந்தான்.
நேற்று காலை 7.10 மணியளவில் பள்ளிக்கு வெளியே சாலையைக் கடக்கும் போது, சிவப்பு விளக்கை மீறிய பெரோடுவா மைவி கார் 11 வயது அச்சிறுவனை மோதித் தள்ளியது.
இதனால் சாலையில் விழுந்த மாணவனுக்கு வலது காலின் பெருவிரல் எலும்பு முறிந்ததோடு, கை கால்களிலும் காயமேற்பட்டது.
இதையடுத்து 28 வயது ஓட்டுநர் கைதாகி விசாரணைக்காக 4 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரின் இரத்தத்தில் மதுபானத்தின் அளவு, அனுமதிக்கப்பட்ட 153 மில்லி கிராமை விட மிக மிக அதிகமாக 230 மில்லி கிராமாக இருந்தது breathalyser எனும் சுவாச பரிசோதனைக் கருவியில் தெரிய வந்தது.