மும்பை, அக்டோபர்-26,அண்மையில் காலமான இந்தியாவின் பெரும் தொழிலதிபர் ரத்தன் டாடா, தனது வளர்ப்பு நாயான டிட்டோவுக்கும் (Tito) உயில் எழுதி வைத்துள்ளது வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
ஜெர்மன் ஷெபர்டு வகையைச் சேர்ந்த டிட்டோவை அதன் வாழ்நாள் முழுவதும் எந்தக் குறையும் வைக்காமல் பராமரிக்க 10,000 கோடி ரூபாய்க்கு அதிபதியான ரத்தன் டாடா உயிலில் சொத்து எழுதி வைத்துள்ளார்.
வளர்ப்புப் பிராணிகளுக்கு சொத்து எழுதி வைப்பது மேலை நாடுகளில் வழக்கமான ஒன்று என்றாலும், இந்தியாவில் சற்று அரிதாக நடப்பது தான்.
இந்நிலையில் கடைசி மூச்சு வரை தன்னுடனேயே வைத்திருந்த டிட்டோவுக்கும் சொத்தெழுதி வைத்து, பிராணிகள் மற்றும் விலங்குகள் மீதான தனது அன்பை ரத்தன் டாடா மீண்டுமொரு முறை நிரூபித்துள்ளார்.
டிட்டோவை, ரத்தன் டாடாவின் நீண்ட நாள் சமையல்காரரான ராஜன் ஷாவ் பாதுகாத்து வருவார்.
அதே பெயரில் வளர்த்து வந்த நாய் இறந்து போனதால், ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு டிட்டோவை ரத்தன் டாடா தத்தெடுத்தார்.
இவ்வேவையில், சமையல்காரர் ராஜன் ஷாவுக்கும், 30 ஆண்டுகளாக தம்மிடம் உதவியாளராக இருந்த சுப்பையாவுக்கும் ரத்தன் டாடா உயில் எழுத்தி வைத்துச் சென்றுள்ளார்.