சுங்கை பூலோ, நவம்பர் 11 – சுங்கை பூலோ, புக்கிட் டாரா தமிழ்ப்பள்ளியின் 47ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி ‘ஒரு மாணவருக்கு, ஒரு பதக்கம்’, என்ற கருப்பொருளுடன் நேற்று மிகச் சிறப்பாக நடைப்பெற்று முடிந்தது.
ஒவ்வொரு மாணவரும் வெற்றியாளரே என்ற நோக்கில் நடைபெற்ற இப்போட்டிக்கு, இவ்வருடம் சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் 5,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கியுள்ளார்.
152 மாணவர்களுடன் 17 ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என நடைபெற்ற இப்போட்டியை, டத்தோ ஸ்ரீ ரமணன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.
ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்குக் குழு மற்றும் தனிநபர் பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், மஞ்சள் இல்லம் இவ்வருடத்தின் வெற்றியாளராக மகுடம் சூட்டியது என பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கணபதி தெரிவித்தார்.
மேலும், பள்ளியின் விளையாட்டு வீரராக மோகன்ராஜ் மற்றும் விளையாட்டு வீரங்கனையாக மெளனிஷா (Mounisa) ஆகியோர் தேர்தெடுக்கப்பட்டனர்.