Latestஉலகம்

இலோன் மாஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கியப் பொறுப்பு; டோனல்ட் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன், நவம்பர்-13 – அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் ட்ரம்ப், பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே தனது இரு தீவிர ஆதரவாளர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்கியுள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் அரசாங்க செயல்திறன் துறைக்கு (Department of Government Efficiency) உலகக் கோடீஸ்வரர் இலோன் மாஸ்க்கும், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமியும் இணைத்  தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசாங்க நிர்வாகத்தில் நிலவும் கெடுபிடிகளை அகற்றுவதையும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதையும், வீண் செலவுகளைத் தவிர்ப்பதையும் அப்புதியத் துறை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலோன்- விவேக் இருவரையும் அற்புதமான அமெரிக்கர்கள் என வருணித்த ட்ரம்ப், அமெரிக்காவை உன்னத இடத்திற்குக் கொண்டுச் செல்வதில் அவர்களின் சேவை தமக்கு மிகவும் தேவையென்றார்.

தெஸ்லா கார் நிறுவன அதிபரும், X தளம் மற்றும் Space X ராக்கெட் நிறுவனத்தின் உரிமையாளருமான இலோன் மாஸ்க், நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு, கிட்டத்தட்ட அறிவிக்கப்படாத வலது கரமாகவே வலம் வந்தார்.

குறிப்பாக, ட்ரம்பின் பிரச்சாரங்களுக்கு கோடிக்கணக்காண டாலர் பணத்தை வாரி இறைத்ததோடு, கடைசிக் கட்டத்தில் X தளத்திலும் மேடை பிரச்சாரங்களிலும் ‘சூறாவளி’ பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரபல மருந்தக நிறுவனத்தின் உரிமையாளரான விவேக் ராமசாமியோ, இதற்கு முன் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் ட்ரம்ப்பை எதிர்த்து நின்றவராவார்.

பின்னர் போட்டியிலிருந்து விலகி ட்ரம்புக்கு ஆதரவு தெரிவித்து, அவரின் பிரச்சார பீரங்கிகளில் ஒருவராக செயல்பட்டார்.

இவ்வேளையில், ட்ரம்பின் அறிவிப்பை தனது X தளத்தில் பகிர்ந்துள்ள விவேக், அதில் இலோன் மாஸ்க்கை tag செய்து We Will Not Go Gently என சுருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.

அதாவது அரசாங்க செயல்திறனை மேம்படுத்துவதில் தாங்கள் கடுமையாக நடந்துக்கொள்ளப் போவதை அவர் கோடி காட்டியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!