ஷா ஆலாம், நவம்பர்-16 – சிலாங்கூர் மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு போனசாக 2 மாதச் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களின் சேவையையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் BKK எனப்படும் அச்சிறப்பு நிதியுதவி வழங்கப்படுவதாக, மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி (Datuk Seri Amirudin Shari) தெரிவித்தார்.
ஏற்கனவே வழங்கப்பட்டு விட்ட ஒன்றரை மாத BKK தொகைக்கு கூடுதலாக இந்த 2 மாத போனஸ் அமைகிறது.
ஒரு மாத போனஸ் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியும், இன்னொரு மாத போனஸ் நோன்புப் பெருநாளை ஒட்டி அடுத்தாண்டு மார்ச் 25-ஆம் தேதியும் வழங்கப்படும்.
சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் 2025-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்த போது அமிருடின் அவ்வறிவிப்பை வெளியிட்டார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒன்றரை மாத BKK சிறப்பு நிதியுதவி கடந்த பிப்ரவரி, மே மாதங்களில் வழங்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.