Latestஉலகம்

தீபாவளி விருந்தில் மதுவும் மாமிசமும் பரிமாறப்பட்ட சர்ச்சை; மன்னிப்புக் கோரிய பிரிட்டன் பிரதமர் அலுவலகம்

லண்டன், நவம்பர் 16 – தீபாவளி விருந்தில் மதுபானங்களும் அசைவ உணவுகளும் பரிமாறப்பட்டதற்காக பிரிட்டன் பிரதமர் அலுவலகம் மன்னிப்புக் கோரியுள்ளது.

அவ்விவகாரம் முன்னதாக சர்ச்சையான நிலையில் 2 வாரங்கள் கழித்து அவ்வறிக்கை வெளியாகியுள்ளது.

பிரிட்டன் பிரதமரின் அதிகாரத்துவ இல்லமான No.10 Downing Street-டில் அக்டோபர் 29-ஆம் தேதி தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

பிரதமர் அலுவலக ஊழியர்களும் இந்து அமைப்பினரும் பங்கேற்ற அவ்விருந்தில், அசைவ உணவுகளுடன், பீர், wine உள்ளிட்ட மதுபானங்களும் பரிமாறப்பட்டதால் பலர் முகம் சுளித்தனர்.

எனினும் இதுபற்றி பிரதமர் அலுவலகம் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரைச் (Keir Starmer) சந்தித்த இந்து அமைப்பின் பிரதிநிதி ஒருவர் அச்சம்பவம் குறித்து அதிருப்தி தெரிவித்தார்.

மது, மாமிசத்தால் பிரதமர் அலுவகத்தின் புனிதம் பாதித்து விட்டதாக அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் அலுவலகம், இனி இது போன்று நடக்காது என உத்தரவாதம் அளித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!